வாய்ஜாலத்திலே மோடி அரசு பொழுதை போக்குகிறது, ஏழைகளுக்கு வேலை கொடுக்காமல் ஒப்பந்தகாரர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே மோடி அரசு செயல்படுகிறது- விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக முன்னதாக காந்தி சிலைக்கு எம்.பி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி மாணிக்கம் தாகூர்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, இன்று முதல் பிப்., 25 வரை நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 7 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் நாடுமுழுவதும் உள்ள காந்தி சிலைகள் முன்பு இன்று தங்களை வருத்தி உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், அடுத்து 12, 19ம் தேதிகளில், ஊராட்சிகள் அளவில் விளக்க கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்றும் வரும் 30ம் தேதி வார்டு அளவில் தர்ணா போராட்டம், பிப்., 7, 15ம் தேதிகளில் மாநில அளவில் போராட்டம், 16, 25ம் தேதிகளில் பேரணி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

வேலை நிறுத்தப்படவில்லை மாறாக 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எம்.பி வேலை உறுதித்திட்டத்தை நிறுத்தும் நோக்கில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது என்றும் 40 சதவிகித நிதியை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி மாநில அரசு பணம் இல்லை என்று சொன்னால் இத்திட்டம் நின்றுவிடும் என்றார்.வேலை விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை கொடுக்க வில்லை என்றால் உதவித்தொகை கொடுக்க புதிய திட்டத்தில் வழிவகை உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,நிதியிருந்தால் தானே கொடுக்க முடியும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றார்.

வெறும், விளம்பரம் மற்றும் வாய்ஜாலத்திலே மோடி அரசு பொழுதை போக்குகிறது என்றும் ஏழைகளுக்கு வேலை கொடுக்காமல் ஒப்பந்தகாரர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே மோடி அரசு செயல்படுகிறது என்றும் அவர் இந்த உண்ணாவிரதத்தில் இறுதியாக தெரிவித்தார்.
Behind News Acham Thavir Nenjam Nimir