கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / Uncategorized / சாதனையாளர்கள் / விருதுநகரில் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழா

விருதுநகரில் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழா

விருதுநகர் நடேசர் நாட்டியாலயாவின் 21 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பாட்டுக்கொரு புலவன் பாரதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை பயின்ற மாணவர்கள் பாட்டிசைக்க, பரதம் பயின்ற 147 மாணவிகள் 33 நிமிடங்கள் இடைவிடாது பரதம் புரிய உலக சாதனை நிகழ்வினை நிகழ்த்தினர். இந்நிகழ்வானது 25.12.2025 அன்று VMGRR. ஸ்ரீ சாரதா சக்தி மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அம்பாள்.ரா.முத்துமணி, சேர்மன் அம்பாள் குழுமம் அவர்கள் தலைமை தாங்க, முனைவர். சு. வினோத், தமிழ் பேராசிரியர், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி, திருமதி வசந்தி சங்கரலிங்கம், தாளாளர். VMGRR சக்கி மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி, திரு. சுந்தர் சொர்னேஸ்வரன், முதல்வர் சக்தி பள்ளி அவர்கள் கௌரவ விருந்தின்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்வை Divine world book of Records நிறுவனம் உலக சாதனையாகப் பதிவு செய்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக திருமதி கிருஷ்ணவேணி பாலமுருகன், திருமதி பாரதி சிவக்குமார், திருமதி மேகலா ராமகிருஷ்ணன், மற்றும் திரு.சிவக்குமார் அவர்கள் செயல்பட்டனர். சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரைக்குப் பிறகு உலக சாதனை சான்றிதழ் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. நடேசர் நாட்டியாலயாவின் நிறுவனர். திருமதி. அகிலா அழகர்சாமி அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வின் மூலம் வளரும் இளம்தலைமுறைக்கு தமிழ் மீது ஆர்வம் வரவழைக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டது ஆகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்

About Admin

Check Also

சி.பி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *