அதிமுக அமைச்சரவையில் எந்த ஊரு அமைச்சரும் பொறுப்பாக பேசியது கிடையாது : பழனியப்பன் என்கிற ஒரே ஒரு அமைச்சரைத் தவிர, பழனியப்பன் குறித்து அவருடைய இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பெருமிதம்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. மணமக்கள் எழில் மறவன் கிருத்திகா ஆகியோரை வாழ்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் திருமணத்தை நடத்தி முடித்த தமிழக முதல்வர் பேசும்பொழுது :
நேற்று முன்தினம் மகளிரின் வெற்றிக்கான அடையாளமாக வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது எனவும், மகளிர்க்காக நாம் ஆட்சிக்கு வந்த பிறகு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும், மேலும் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மகளிர்க்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கி இருப்பதாகவும், இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது, இதை நாங்கள் வெளியிட்ட அறிக்கையில்லை ரிசர்வ் வங்கியே அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. சோதனைகள் எல்லாம் தாண்டி சாதனை படைத்திருக்கக்கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் அரசு.
எஸ் ஆர் ஐ சட்டத்தை கொண்டு வந்து அந்தப் பணியிலும் தோழர்கள் பம்பரமாக செயல்பட்டு இருக்கின்றனர். நம்முடைய வாக்குரிமையை காப்பாற்றி ஆக வேண்டும். நம்முடைய எதிரிகள் நம்மை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்களிடம் நாம் ஏமாந்து விடக்கூடாது என திருமாவளவன் சொன்னதைப் போல வீடு வீடாக சென்று மக்களிடத்திலேயே எடுத்துச் சொல்லி அதை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டு வளர்ச்சி தொடர் வேண்டும் அதில் நிச்சயமாக உங்களுக்கு பங்கு இருக்கிறது என்றார்.
பழனியப்பன் அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருக்கும் போது அவர் பேசும்பொழுது மட்டும் நாங்கள் அமைதியாக இருப்போம். அதிமுக அமைச்சர்கள் எந்த அமைச்சரும் இதுவரை பொறுப்பாக பேசியதில்லை, ஆனால் அமைச்சர் அவையில் ஒரே ஒரு அமைச்சர் பதில் சொல்கிறார் என்றால் அவர் பழனியப்பன் ஆகத்தான் இருக்கும். மற்ற அமைச்சர்கள் பேசும் பொழுது நாங்கள் பாதியில் இருந்து கிளம்பியது உண்டு, அந்த அளவிற்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள், ஆனால் பழனியப்பன் பதில் தெரிவிக்கிறார் என்கிற பொழுது நாங்கள் அனைவரும் சட்டமன்றத்தில் அமர்ந்திருப்போம். அந்த அளவிற்கு கண்ணியத்தை ஜனநாயகம் அன்போடு இருக்கக்கூடியவர் பழனியப்பன் பேசினார்.
Behind News Acham Thavir Nenjam Nimir