கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / ஆன்மீகம் / கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது

மார்கழி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு மலரும் மாலைகள், பல்வேறு வண்ண பூக்கள், எலுமிச்சை, தாமரை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது

இதில் இந்த வருடத்தின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

About Admin

Check Also

சி.பி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *