திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்! இந்த முறை திராவிடக் கட்சிகள் நேரடியாக போட்டியிடுமா ? இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு இதோ !!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொகுதியாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டின் முருகனின் படைவீடுகளிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில். முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு, இந்த தொகுதியும் கோயிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிரச்சனைகளிலும் பாஜக தேசிய தலைமை நேரடியாகவே ‘இது கந்தன் மலையா? சிகந்தர் மலையா?’ என்று பேசியுள்ளது. இதனால் இந்த தொகுதி தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பிரபலமடைந்தது. இந்த ‘சென்சேஷனல்’ தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்பதைப் பார்ப்போம்.
இத்தொகுதி தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளுடன் நெருங்கிய தொடர்ப்பை கொண்டுள்ளது, அண்ணா தலைமையிலான இரண்டாவது மாநாடும், கலைஞர் கருணாநிதி தலைமைையில் இரண்டாவது செயற்க்குழு, பொதுக்குழுவும் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவின் முதல் பொதுக்கூட்டமும், விஜயகாந்த் தனது கட்சியை தொடங்கியதும் இத்தொகுதியில் தான் நடைபெற்றது.
மதுரையின் அடையாளங்களான காமராஜர் பல்கலைக்கழகம், எல்காட் தொழில்பூங்கா, விமான நிலையம், நீண்டகாலமாக கட்டப்பட்டு வரும் எயிம்ஸ் மருத்துவமனை ஆகியவை அனைத்தும் இத்தொகுதியில் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகைப்பூ உட்பட பல்வேறு பணப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பெறுவதில் விவசாயிகள் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், மல்லிக்கைப்பூ விலை வீழ்ச்சியில் இருந்து மீட்க வாசனை திராவிய ஆலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்தத் தொகுதியில் பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக மாறி மாறி வெற்றி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன. அவற்றில் அதிமுக 8 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 2 முறை, மற்றும் தெமுதிக 1 முறை வெற்றி பெற்றுள்ளது. முன்னர் நடைபெ்றற இடைத்தேர்தலின் போது, மருத்துவமனையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தைப் பெற்றது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
தொகுதி நிலவரம்
திருப்பரங்குன்றம் தொகுதியில், முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர், அடுத்தபடியாக சவுராஷ்டிரா, முத்தரையர், கோனார், ஆதி திராவிடர், கிறித்துவர்கள், இதர சமூக மக்கள் வசிக்கின்றனர். இதில், முக்குலத்தோர் சுமார் 35%, சௌராஷ்டிரா மற்றும் முத்தரையர் தலா 15% என பெரும்பான்மையாக உள்ளனர். இச்சமூகங்கள் தொகுதியின் வெற்றி வாய்ப்பை பெருமளவில் தீர்மானிக்கின்றனர்.
இந்த தொகுதியை பலரும் குறிவைத்து பணியாற்றி வரும் நிலையில், சிலர் மட்டுமே முன்னிலைப் பெறுகின்றனர். குறிப்பாக, திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க பாண்டியனின் மனைவி மதுரை மாவட்ட தெற்கு திமுக மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா பாண்டியன் குறிப்பிடத்தக்கவர்.
திமுக கிருத்திகா தங்கபாண்டியன்
கடந்த தேர்தலில் இவரின் பெயர் பேசப்பட்டபோதிலும், கடைசி நேரத்தில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுத்தாய் வேட்பாளராக ராஜன் செல்லப்பா எதிராக நிறுத்தப்பட்டார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கிருத்திகா பாண்டியன் வழங்கியுள்ளார், மதுரையில் ஒரு ஐடி நிறுவனம் நடத்துகிறார். மேலும், திமுகவின் ஏர்போர்ட் பாண்டியன், இளைஞரணியின் விமல் ஆகியோரும் இத்தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அதிமுகவைப் பொறுத்தவரை, புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவே மீண்டும் களம் இறங்குவார் என கூறப்படுகிறது. 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தற்போது அதிமுகவில் உள்ள டாக்டர் சரவணனும்,
அதிமுக டாக்டர் சரவணன்
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் வெற்றி பெறுவார் என நம்பி தீவிரமாக பணியாற்றி வருகிறார். நேரடியாக எடப்பாடியிடமும் இத்தொகுதியை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
பாஜக ராம சீனிவாசன்
திருப்பரங்குன்றம் கோயிலை மையமாக வைத்து பெரிய போராட்டங்களை மேற்கொண்ட பாஜக, இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் ‘இந்து–எதிர் திமுக’ என்ற தனது கதையாடலை…
Behind News Acham Thavir Nenjam Nimir