கரூர்..
கரூரில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலையில் மாற்று கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 400 பேர் இணைப்பு விழா – 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மற்றும் மாற்றுக் கட்சியினர் 200 பேர் என மொத்தம் 400 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தவெக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஸ்குமார் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலையில் சுமார் 400 பேர் தவெகவில் இணைந்தனர். மேலும், அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் 130 பேருக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Behind News Acham Thavir Nenjam Nimir