கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி 28.12.2025 மற்றும் 04.01.2026 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்று விளக்கும் வகையிலும் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உயர் மதிப்பெண் பெறுவது எவ்வாறு என்பது குறித்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி எவ்வித கட்டணமும் இல்லாமல் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதன் முதலாக கரூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியினைப் பள்ளியின் தலைவர் திரு. துரைராஜ் பெரியசாமி துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கருத்தாளர்களாக 40000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சீக்கர்ஸ் நிறுவனர் (SEEKERS ACADEMY TRICHY)திரு.ஆர்.வி.எஸ் முரளிதர், பதினெட்டு ஆண்டுகள் கணிதத்துறையில் அனுபவம் வாய்ந்த திரு.சிவராஜ், பத்து ஆண்டுகளுக்கு மேல் அறிவியல் துறையில் பணியனுபவம் பெற்ற திரு. கனிஷ்கர் ஆகியோர் பங்கு பெற்று மாணவர்களுக்குப் பல சிறப்பான தகவல்களை வழங்க திட்டமிட்டுள்ளனர் .

மேலும் மாணவர்களின் மனவளத்தை மேம்படுத்தும் விதமாக உளவியலாளர் திருமதி. ரம்யா சுந்தரம் பங்கு பெற்று வழிகாட்ட உள்ளார். இவ்வாய்ப்பினை சி.பி.எஸ்.இ யில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Behind News Acham Thavir Nenjam Nimir