விருதுநகரில் கைப்பேசி ஒளி மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்ட களத்தில், இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்ற செவிலியர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று தமிழக வெற்றி கழகத்தினர் ….
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக செவிலியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து தனதுஅத்தியாவசிய கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைபேசி ஒளியுடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழகவெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.மேலும் செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்தனர்.
Behind News Acham Thavir Nenjam Nimir