ஆற்காடு தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டாக்டர் ஜோதிக்குமார் விருப்ப மனுவினை அக்கட்சித்தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் மும்முனை போட்டியா ? நான்குமுனை போட்டியா ? என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுக கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிகுமார், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை தாக்கல் செய்தார். இம்மனுவினை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் பெற்றுக்கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்றத்தின் எதிர்கட்சித்துணை தலைவரும், முன்னாள் அமைச்சரும், புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
Behind News Acham Thavir Nenjam Nimir