கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / கல்வி / பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ‘விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு’: மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ‘விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு’: மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கரூர், டிசம்பர் 15:

கரூர் பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் (Career Guidance Centre) சார்பில், இன்று “விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு” (Meet The Scientist) என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கான்பூரிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR – CLRI) விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் ஆர்வத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு அறிவியல் நிறுவனங்கள், விஞ்ஞானியாக உருவெடுப்பது எப்படி, மற்றும் படிப்பு சார்ந்த இலக்குகளில் கவனத்தைச் சிதறாமல் செலுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். மேலும், ஐ.ஐ.டி (IIT), என்.ஐ.டி (NIT) போன்ற இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்தும் விஞ்ஞானி முனைவர் ஜெய பிரகாஷ் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் திரு. எஸ். மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் திருமதி. பத்மாவதி மற்றும் அறங்காவலர் திருமதி. சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி. ராமசுப்ரமணியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளி முதல்வர் திருமதி. சுதாதேவி, உயர்கல்வி வழிகாட்டுதல் மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான திருமதி. பிரியா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜெர்லின் கிரிஸ்டல் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

About Admin

Check Also

சி.பி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *