
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் 2026 வர இருப்பதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் விவரங்களையறிய தொண்டர்களிடையே விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் இணை செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன் தனது விருப்ப மனுவினை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வாழ்த்து பெற்றதோடு, முன்னதாக பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெ.ஜெயலலலிதா ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று வணங்கி ஆசிர்வாதம் பெற்று விருப்ப மனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Behind News Acham Thavir Nenjam Nimir