விருதுநகரில் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினையொட்டிய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திமுக சார்பில் பல்வேறு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு ஏற்பாட்டில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கூடைப் பந்தாட்ட போட்டி விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, கோவை ,சென்னை, நெல்லை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மேலும்,இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூடைப் பந்தாட்ட போட்டியில் பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இரண்டாம் பரிசை செந்தில்குமார் காலேஜ் பெண்கள் அணியும் தட்டி சென்றன. ஆண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் ராஜலட்சுமி வாரியர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், யுனைடெட் வாரியர்ஸ் கோயம்புத்தூர் முதல் பரிசையும் தட்டிச் சென்றது .

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் கௌதமன் கலந்துகொண்டு பரிசு கோப்பைகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மித்ரு நாகேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சிறப்பாக செய்திருந்தது
Behind News Acham Thavir Nenjam Nimir