கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமன சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
Saturday , February 28 2026
Breaking News
Home / தமிழகம் / செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் !!

செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கரூர் மாவட்ட பாமக செயலாளர் கொங்கு பிரேம்நாத் !!

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் தேவி தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதில் குறிப்பிட்டதை போல அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும், செவிலியர்களுக்கு 7, 14, 20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட செயலாள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த செவிலியர்கள் நிலைமையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோருக்கும் எடுத்து சொல்லி இருப்பதாகவும் அவர் தெரிவித்ததோடு, பாமக கட்சி பாட்டாளிகளின் போராட்டத்திற்கு என்றும் ஆதரவாய் இருக்கும் என்றும் அவர் (கொங்கு பிரேம்நாத்) ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், செவிலியர்கள் கரூர் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் , அதன் தலைவர் அன்புமணி ராமதாசுவிற்கும், பொருளாளார் கவிஞர் திலகபாமா ஆகியோருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

About Admin

Check Also

சி.பி.எஸ்.இ பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

கரூர் BIRLA OPENMINDS INTERNATIONAL SCHOOL ல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்கோர் மோர்’ என்னும் நிகழ்ச்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *