கரூரில் நடைபெற்ற பிள்ளையார் நோன்பு 39-ஆம் ஆண்டு விழாவில் 1 கிலோ உப்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர நிகழ்வு நடைபெற்றது.

கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா 39-ம் ஆண்டாக, கரூரில் உள்ள ஆர்த்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகரத்தார் சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமையில், பொருளாளர் குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார்.

இதையடுத்து நோன்பு களைந்து, பின் அவர்கள் கூடியிருந்த 500 பேருக்கு இளை எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர். தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, குழந்தை சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் சிலை உள்ளிட்ட 18 மங்கள பொருட்களை சமூக நிதித் திரட்டலுக்காக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தினை செயலாளர், மேலை பழநியப்பன் நடத்தினார். இதில் ருசிகரமாக, உப்பு 1 கிலோ 26,000 ரூபாய்க்கும், மண மாலை 10,001 ரூபாய்க்கும், மஞ்சள் 7,501 ரூபாய்க்கும், நாட்டு சர்க்கரை 7,000 ரூபாய்க்கும், விநாயகர் சிலை விக்ரகம் 9,000 ரூபாய்க்கும், குங்குமம் 4,000 ரூபாய்க்கும், ஆண் குழந்தை சட்டை 10,001, தேங்காய் 5001 ஸ்கூல் பேக் 10000, பிளாஸ்டிக் வீடு 10,001 ரூபாய்க்கும் என மொத்தம் சுமார் 1 லட்சத்து 75ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் நகரத்தார் சங்க தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன், செயலாளர் மேலை.பழநியப்பன், பொருளாளர் பு.ம.குமரப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Behind News Acham Thavir Nenjam Nimir